வில்லியம்-மேரி கல்லூரயில் அமைந்துள்ள, சர்வதேச பட்டப்படிபிற்கான ரீவ்ஸ் மையத்தில் உள்ள உதவி ஆணையரின் அலுவலகம்,

சர்வதேச பிரச்சனைகள் சம்பந்தமான உலகமயக்கல்வியையும், சர்வதேச மாணவர்கள் மற்றும் கல்விமான்களையும் ஆதரிக்கும் ஸ்தாபனமாகும்.

1989-ல், திருமதி வெண்டி ரீவ்ஸ் அவர்கள், அவரின் கணவரும், "அமைதியின் உடற்கூறு" (Anatomy of Peace) என்ற பதிப்பின் ஆசிரியருமான,

திரு எமரி அவர்களின் நினைவாகக்கொடுக்கப்பட்ட அன்பளிப்பால் வில்லியம்-மேரியில் ஆரம்பிக்கப்பட்ட இம்மையம், கல்வியறிவு, கற்பித்தல்,

ஆராய்ச்சி மற்றும் சமுதாய ஈடுபாடுகளை சர்வதேசமயமாக்கும் நோக்குடன் ஆதரவு அளிப்பதுடன் அதன் மேம்பாட்டிற்காகவும் செயல்பட்டு

வருகிறது. மாணவர்களுக்கும், கல்வித்துறை வல்லுனர்களுக்கும் மற்றும் வில்லியம்-மேரி சமூகத்திற்கும் இம்மையத்தில் சந்தர்ப்பம் அளிப்பதன்

மூலம் உலக அனுபவங்களின் பரிமாணத்தை உணர்வதற்கும், அதைக்கற்பதற்கும், எமரி-வெண்டி ரீவ்ஸ் மையம் வாழ்நாள் முழுவதற்குமான

அமைதித்திட்டத்தை சர்வதேச உணர்வின் அடிப்படையில் அமைத்திருக்கிறது.

ஆரம்பித்து இருபது ஆண்டுகளுக்கு மேலான ரீவ்ஸ் மையம், இன்று, கல்லூரியின் பட்டப்படிப்பிற்கான மேம்பாட்டுத்திட்டங்களுடன் செயல்படுவதோடு

மேலை நாட்டுக்கல்விக்காக, சர்வதேச மாணவர்கள் மற்றும் கல்விமான்களின் உலக ரீதியான ஒப்பந்தங்களுடன் பணியாற்றும் பல்கலைக்கழகமாகவும்

திகழ்கிறது.

ஒவ்வொரு வருடமும் ரீவ்ஸ் மையத்தில்:-

      1. 500 க்கும் மேற்பட்ட வில்லியம்-மேரி மாணவர்களின் மேலைநாட்டு பட்டப்படிப்பு ஏற்கப்படுகிறது.

      2. வெளிநாடுகளில் 15 கோடைகால கல்வித்திட்டங்களை நிறைவேற்றுவதுடன், 12 நாடுகளில் உள்ள 16 பல்கலைக்கழகங்களில், கல்விக்கழக பரிவர்த்தனை திட்டங்களும் செயலாக்கப்படுகிறது.

      3. சர்வதேச சமுதாயத்தின் 450 க்கும் மேற்பட்ட பட்டப்படிப்பு மற்றும் மேற்படிப்பு மாணவர்களையும், 100 க்கும் மேற்பட்ட கல்விமான்களையும்

ஆதரித்து வருகிறது.

      4. 100 க்கும் மேற்பட்ட கல்விக்கழக நிகழ்ச்சிகளுக்கு ரீவ்ஸ் மையத்தில் இடமழிப்பதன் மூலம் இது ஒரு சர்வதேச நோக்குடன் செயல்பட்டு வருகிறது.